பெரம்பலூர் மாவட்டம்தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு எச்.ஐ.வி / எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் இ.ஆ.ப., கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பெரம்பலூர் பாலக்கரை பகுதியில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலுவலகம் சார்பில் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு எச்.ஐ.வி / எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் இ.ஆ.ப., இன்று (13.08.2025) கொடியசைத்து தொடங்கி வைத்து, பொது மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12ஆம் நாள் தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இந்த ஆண்டு தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவில் செஞ்சுருள் சங்க நிகழ்வுகள் 13.08.2025 முதல் 12.10.2025 வரை 60 தினங்களுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இன்று எச்.ஐ.வி / எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்.
மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான ஓசை கலைக்குழுவினரின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, ஆட்டோக்களில் எச்ஐவி எய்ட்ஸ், பால்வினை நோய், குடும்ப கட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஒட்டினார்.
இந்த விழிப்புணர்வு பேரணியானது பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் தொடங்கி வெங்கடேசபுரம், கிருஷ்ணா திரையரங்கம், சங்குப்பேட்டை, காமராஜர் வளைவு வழியாக ஆத்தூர் சாலையில் உள்ள பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவுபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியில் கல்லூரி மாணவிகள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திக்கொண்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் மருத்துவ நலப்பணிகள் மரு.மாரிமுத்து, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலுவலர்/ மாவட்ட சுகாதார அலுவலர் மரு. கீதா, மாவட்ட திட்ட மேலாளர் (பொ) சுமதி, துணை இயக்குநர் (காசநோய்) மரு.நெடுஞ்செழியன், தேசிய சுகாதாரக் குழுமம் உதவி திட்ட அலுவலர் மரு.விவேகானந்தன், ஆற்றுப்படுத்துநர் பழனிவேல்ராஜன், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு பணியாளர்கள், நம்பிக்கை மைய ஆலோசகர்கள், எச்.ஐ.வி சேவை பிரிவு தொண்டு நிறுவனர் பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

