பெரம்பலூர் மாவட்டம்மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் இ.ஆ.ப., முன்னெடுப்பினால் சமூக பொறுப்புணர்வு பணியின் கீழ் குரும்பலூர் ஏரி வரத்து வாய்க்காலில் வளர்ந்துள்ள முட்புதர்கள் மற்றும் நாணல்கள் அகற்றும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் குரும்பலூர் ஏரி வரத்து வாய்க்காலில் வளர்ந்துள்ள முட்புதர்கள் மற்றும் நாணல்கள் அகற்றும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் இ.ஆ.ப., தொடங்கி வைத்தார்.
பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் பேரூராட்சி, பெரம்பலூர் முதல் துறையூர் செல்லும் சாலையில் குரும்பலூர் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி காட்டுவாரியின் நீளம் 2,500 மீட்டர் ஆகும். இந்த ஏரியின் முழு நீர்மட்டம் 146.300 மீ, அதிகபட்ச நீர்மட்டம் 146.910 மீ மற்றும் கரையின் மேல் மட்டம் 148.200 மீ ஆகும். குரும்பலூர் ஏரிக்கு நீர் வரும் வரத்து வாய்க்கால் முழுவதும் முட்புதர்கள் மண்டி, மேடிட்டு மண் மேடிட்டு தூர்ந்து உள்ளதால் நீர் வெளியேற்றும் திறன் குறைந்து காணப்படுகிறது. இதன்தொடர்பாக குரும்பலூர் பகுதியில் உள்ள விவசாய பெருமக்கள் ஏரியில் வளர்ந்துள்ள முட்புதர்கள் மற்றும் நாணல்களை அகற்றுமாறு விவசாயிகள் குறைதீர் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு முகாம்களில் மனுக்கள் மற்றும் கோரிக்கை அளித்தனர்.
இம்மனுக்கள் மற்றும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிடும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் இதன்மீது தனிகவனம் செலுத்தி, சமூக பணியில் ஈடுபாடு கொண்டவர்களிடம் இப்பணி குறித்து தெரிவித்ததன் அடிப்படையில், சமூக பொறுப்புணர்வு பணியின் கீழ் குரும்பலூர் ஏரி வரத்து வாய்க்காலில் வளர்ந்துள்ள முட்புதர்கள் மற்றும் நாணல்கள் அகற்றி தருவதாக ஒப்புதல் பெறப்பட்டு தூர்வாரும் பணி இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நீர் வெளியேறும் திறன் அதிகரிக்கப்பட்டு, பக்க நிலங்கள் சேதம் ஏற்படுவதை தடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு, ஏரியில் சேமிக்கப்படும் நீர் முழுமையாக விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு விவசாயிகள் பயன்பெறவுள்ளனர். இப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நீர்வளத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.தேவநாதன், நீர்வளத்துறை உதவி பொறியாளர்கள் கமலக்கண்ணன்,
பார்த்திபன், செயல் அலுவலர் க.தியாகராஜன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்