மாவட்ட செய்திகள் ராமநாதபுரம் மாவட்டம்கமுதியில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் 102-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அசைவ அன்னதானத்தை கழக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி துவக்கி வைத்தார். உடன் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன் உள்ளனர். July 9, 2025
மாவட்ட செய்திகள் பெரம்பலூர் மாவட்டம்வேளாண் இயந்திரங்களின் கருவிகள் இயக்குதலும், பராமரித்தலும் குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்து, நடப்பாண்டில் ரூ.2.82 கோடி மதிப்பிலான 163 வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் ரூ.1.39 கோடி மானியத்தில் வழங்கப்பட உள்ளது என தெரிவித்தார். July 9, 2025
மாவட்ட செய்திகள் கரூர் மாவட்டம் தாந்தோணியில் செயல்படும் மகளிர் குழுக்களைச் சந்தித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்துரையாடினார். July 9, 2025
மாவட்ட செய்திகள் சேலம் மாவட்டம் ஓமலூர் பஸ் நிலையம் அருகே மத்திய மோடி அரசை கண்டித்து,விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓமலூர் ஸ்டேட் பேங்க் அருகே மறியலில் ஈடுபட்ட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஓமலூர் காவல்துறையினர் கைது செய்தனர். July 9, 2025
மாவட்ட செய்திகள் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர் ஒன்றியம் கொட்டரை ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமினை துவக்கி வைத்தார். July 9, 2025
மாவட்ட செய்திகள் பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நகராட்சி 15 வது வார்டு எம்ஜிஆர் நகர் பகுதி மக்களை நேரில் சந்தித்து ஓரணியில் தமிழ்நாடு என்று உறுப்பினர் சேர்க்கை முகாமில் ஈடுபட்ட போது சட்டமன்ற உறுப்பினர் எம் பிரபாகரன் அவர்கள் மற்றும் பெரம்பலூர் தொகுதி தலைமைக் கழக தொகுதி பார்வையாளர் தங்க சித்தார்த்தன் அவர்கள் வார்டு செயலாளர் தகவல் தொழில் நுட்ப பணி நிர்வாகிகள் அணிச் செயலாளர்கள் மக்களை நேரில் சந்தித்து உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது வருகின்றது. July 9, 2025
மாவட்ட செய்திகள் நன்மங்கலம் பகுதியில் அடக்கஸ்தலம் அமைத்துதர வேண்டி இஸ்லாமியர்கள்அமைச்சரிடம் மனு அளித்தனர். July 9, 2025
மாவட்ட செய்திகள் பொது அடக்க ஸ்தலம் வேண்டி கிறிஸ்துவர்கள் அமைச்சர் தா.மோ அன்பரசன் அவர்களிடம் மனு அளித்தனர். July 9, 2025
மாவட்ட செய்திகள் சேலம் மாவட்டம், இடங்கணசாலை சிஐடியு ஆட்டோ தொழிற்சங்க சார்பில் ஒன்றிய அரசின் தொழிலாளர்களுக்கு எதிரான கொள்கைகளை கண்டித்தும், பெட்ரோல், டீசல், கேஸ் உளளிட்டவற்றின் விலையை கட்டுப்படுத்தவும், புதிய மோட்டார் வாகன சட்டத்தால் ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது குறித்தும், சட்டத்திற்கு புறம்பாக இயக்கப்படும் பைக் டாக்ஸி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இளம்பிள்ளை ஆட்டோ தொழிலாளர்கள் ஒரு நாள் வேலை நிருத்தத்தில் ஈடுபட்டனர்.. July 9, 2025
மாவட்ட செய்திகள் சேலம் மாவட்டம் பூலாம்பட்டி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டு கடல் போல் தேங்கி நிற்கும் நீர் தேக்கத்தினை காண அமெரிக்க நாட்டில் உள்ள மிசோரி இருந்து 10க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பூலாம்பட்டிக்கு வந்தனர். July 9, 2025