கும்பகோணத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட மாநகர திமுக சார்பில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம்.

தஞ்சை வடக்கு மாவட்ட மாநகர திமுக சார்பில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் செப்டம்பர் 27ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் கும்பகோணம் கும்பேஸ்வரர் மேலவீதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர கழக செயலாளர் மாநகராட்சி துணை மேயர் சு.ப.தமிழழகன் தலைமை வகித்தார். மாநகர கழக அவை தலைவர் எஸ்.வாசுதேவன் வரவேற்புரை வழங்கினார்,
இக்கூட்டத்திற்கு மாநிலங்களவை உறுப்பினர் சு.கல்யாண சுந்தரம், தலைமை செயற்குழு உறுப்பினர் செ.ராமலிங்கம், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட கழக பொறுப்பாளர் சாக்கோட்டை க.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் கழக சட்டத்துறை இணை செயலாளர் சூர்யா வெற்றி கொண்டான் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

அதனைத் தொடர்ந்து முப்பெரும் விழா கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐம்பெரும் முழக்கங்கள் சொல்லப்பட்டது. அதில் திமுகவினர் கூறுகையில் அண்ணா வழியில் அயராது உழைப்போம், ஆதிக்கம் மற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம் எனவும், இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் எனவும் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுய ஆட்சி, வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம் எனவும் அவர்கள் மேடையில் உறுதிமொழி ஏற்றனர்.
பின்பு புதியதாக பொறுப்பேற்ற மாணவரணியினுடைய பொறுப்பாளர்கள் மற்றும் அமைப்பாளர்களுக்கு சால்வை அணிவித்து பூத் கமிட்டி அமைக்க பேனா வழங்கப்பட்டது.
பின்னர் கூட்டத்தின் முடிவில் மாநகரக் கழக துணை செயலாளர் பிரியம் ஜெ,சசிதரன், மாநகராட்சி நகரமைப்பு குழு தலைவர் ஆர்.முருகன் நன்றி உரை வழங்கினார்.
இந்நிகழ்வில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட கழக பிரதிநிதிகள், ஒன்றிய கழக செயலாளர்கள், பேரூர், கழக நிர்வாகிகள், மற்றும் மாவட்ட, வட்ட, மாமன்ற உறுப்பினர்கள் என கழக நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர்.
