தேனி மாவட்டம் போடி சிசம் மெட்ரிக் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்.

தேனி மாவட்டம் போடி சிசம் மெட்ரிக் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்த மருத்துவ முகாமில் மருத்துவ ரீதியான அனைத்து சிகிச்சைகளும் இலவசமாக பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டது.இந்த சிறப்பு முகாமில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ் லட்சுமணன் அவர்கள் திமுக போடி நகர செயலாளர் புருசோத்தமன்,நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர்,திமுக போடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஐயப்பன்,திமுக தேனி வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆஜிப்கான் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சங்கர் பொதுக்குழு உறுப்பினர் ராஜ ரமேஷ், முன்னாள் திமுக நகர செயலாளர் ம.வீ. செல்வராஜ் மற்றும் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்