சிங்கபெருமாள் கோயில் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்.

சிங்கபெருமாள் கோயில் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் ஒன்றிய செயலாளர் .கே. பி .ராஜன் ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன் பங்கேற்றார்.
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், சிங்கபெருமாள் கோயில் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி, துரைபாபு ஏற்பாட்டில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மத்திய ஒன்றிய செயலாளர் கே. பி. ராஜன், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன் கலந்து கொண்டு முகாமினை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். இந்த முகாமில் வருவாய்த்துறை, மின்சாரத்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட 15 க்கு மேற்பட்ட துறைகள் சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டனர்.

முன்னதாக கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், விவசாயிகளுக்கு விதைப்பொருட்கள், இல்லம் தேடி மருத்துவம் உள்ளிட்டவை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
இதில் துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் காஞ்சி வடக்கு மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் மற்றும் சிங்கை ஜெ ஜெ நகர் கழகப் பிரதிநிதி அலி சஃபர், 2வது வார்டு கிளை செயலாளர் J.K. சையத், சிங்கப்பெருமாள் ஊராட்சி செயலர் ஆனந்தன், அரசுத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.