இராமநாதபுரம், சாத்தன்கோன் வலசை ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டம்.

தமிழ்நாடு முழுவதும் 12,480 ஊராட்சிகளில் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் நம்ம ஊர் நம்ம அரசு என்கிற மகத்தான திட்டத்தின் வழியில் காணொளி காட்சி மூலம் கலந்துகொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்து உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அந்தவகையில் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி, மண்டபம் மத்திய ஒன்றியம், சாத்தன்கோன் வலசை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் கலந்து கொண்டு மக்கள் குறைகளை கேட்டறிந்து அனைத்து குறைகளுக்கும் தீர்வு காண அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், கிராம பொதுமக்கள், கழக நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்திகள்