சத்யா மூவிஸ் தயாரிக்கும் அருளாளர் இராம வீரப்பன் குறித்த ஆவணப்படம் “ மனம் திறந்த முதல்வர் “ “ மனம் உருகிய Super ஸ்டார் “

சத்யா மூவிஸ் தயாரிக்கும் அருளாளர் இராம வீரப்பன் குறித்த ஆவணப்படத்தின் முன்னோட்டாம் வெளியீடு.

இராம வீரப்பனின் ” கிங் மேக்கர் ” ஆவணப்படத்தின் முன்னோட்டம் வெளியானது.

உலகத்தரத்திற்கு இணையாக மிக பிரம்மாண்டாமாக உருவாகி வரும் , அருளாளர் ஐயா திரு.இராம வீரப்பன் அவர்களின் ‘ king maker ‘ என்னும் ஆவணப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது .

சமீபத்தில் மறைந்த மூத்த அரசியல் தலைவரும் , சத்யா மூவிஸின் நிறுவனர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளருமான திரு.இராம வீரப்பன் ஐயா அவர்கள் குறித்த ஆவணப்படம் மிக பிரம்மாண்டமாகவும் வரலாற்றில் நாம கவனிக்க தவறிய முக்கிய நிகழ்வுகளை நம் கண்முன் நிறுத்தும் விதமாக மிக நேர்த்தியாகவும் தயாராகி வருகிறது .

தமிழகத்தின் அரசியல் மற்றும் திரையுலக வரலாற்றில் முக்கிய ஆளுமையாக இருந்த ஐயா அவர்களின் ஆவணப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் வேளையில், சூப்பர் ஸ்டார் மற்றும் உலக நாயகன் உள்ளிட்ட திரையுலகத்தின் முன்னணி பிரபலங்கள் மற்றும் தமிழக முதல்வர் ஐயா திரு மு.க.ஸ்டாலின் உட்பட அனைத்து கட்சிகளையும் சார்ந்த பல தன்னிகரற்ற அரசியல் தலைவர்கள் என அனைவரும் இதில் பங்கேற்று அவருடனான தங்களின் அனுபவங்களை பகிர்ந்து சிறப்பு செய்துள்ளனர் .

மேலும் ஒன்றிய அரசுக்கு செங்கோல் வழங்கிய தர்மபுரம் ஆதினம், மற்றும் காஞ்சிபுரம் மடத்தை சார்ந்த காஞ்சி பெரியவர் ஆகியோறும் இந்த ஆவணப்படத்தில் பங்கு கொண்டு ஐயா அவர்களை போற்றியுள்ளனர்.

அதுமட்டுமல்லாது பல துறைகளை சார்ந்த வல்லுநர்களாகிய மூத்த இஸ்ரோ விஞ்ஞானி திரு நம்பி நாராயணன், மற்றும் பத்மபூசன் விருது பெற்ற தொழிலதிபர் திரு நல்லி குப்புசாமி ஆகியோறும், தமிழிலக்கிய துறையை சார்ந்த கவிப்பேரரசு வைரமுத்து ஐயா அவர்களும், முன்னாள் அரசவை கவிஞர் திரு முத்துலிங்கம் அவர்களும் மேலும் கலை இலக்கிய கல்விதுறையை சார்ந்த ஆன்றோர் சான்றோர் என அனைவரும் இந்த ஆவண படத்தில் பங்கேற்று சிறப்பு செய்துள்ளனர் .

திராவிட இயக்கங்களின் மகத்தான தலைவர்களான தந்தை பெரியார், அறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் ஆகியோருடன் நெருங்கி பழகியவர் ஐயா இராம. வீரப்பன் அவர்கள் .

எம் ஜி ஆர் என்னும் காலத்தில் அழியாத சிற்பத்தை செதுக்கியவர் ஐயா இராம வீரப்பன் அவர்கள்.

திராவிடம் மேலோங்க மாபெரும் பங்காற்றிய மட்டற்ற தலைவராகிய இவர் 5 முறை தமிழக அமைச்சராகவும் மூன்று முறை சட்டப்பேரவை மேலவை உறுப்பினராகவும், இரண்டு முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.

தமிழகத்தின் வரலாற்றில் தவிர்க்க முடியாத இடம்பிடித்த ஆளுமையான அருளாளர் இராம வீரப்பன் அவர்களின் நினைவைப் போற்றும் வகையிலும், அவரைப்பற்றி இன்றைய இளைய தலைமுறையினர் மற்றும் வருங்கால சந்ததியினர் முழுமையாக தெரிந்து கொள்ளும் வகையிலும், உலகத்தரத்தில் ஒரு ஆவணப்படத்தை அவருக்காக சிறப்பாக தயாரித்து விரைவில் வெளியிட உள்ளது சத்யா மூவிஸ் நிறுவனம்.

இந்த ஆவணப்படத்தின் 8 நிமிட முன்னோட்டத்தை அருளாளர் திரு இராம வீரப்பன் ஐயா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினமான இன்று ( ஏப்ரல் 9 ) சத்யா மூவிஸ் வெளியிட்டுள்ளது.

இந்த முன்னோட்டத்தில் தமிழக முதல்வர் திரு மு. க.ஸ்டாலின் அவர்கள்
“ இந்த ஆவணப் படம் காலத்தின் கட்டாயம் “ என்று மனம் திறந்து பேசியுள்ளார்.

மேலும் super ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் “ he is a real king maker “ என மனம் உருகி ஐயா அவர்களை நெகிழ்ந்து பாராட்டியுள்ளார்.

இந்த முன்னோட்டத்தை சத்யா மூவிஸ் யூ டியூப் ( youtube.com/sathyamoviesonline ) மற்றும் அனைத்து சமூக வலைத்தளங்களிலும் அனைவரும் கண்டு களிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது .

தொடர்புடைய செய்திகள்