2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்த ஆலோசனைக் கூட்டம்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள ஜீவன் டிரஸ்ட் அலுவலகத்தில், தமிழ்நாடு சமூக செயல்பாட்டு உரிமைகள் அமைப்பின் (TSR0) சார்பாக, வர இருக்கின்ற 2026 சட்டமன்ற பொது தேர்தலில் பொதுமக்கள் 100% வாக்குப்பதிவு செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஒவ்வொரு முறையும் உள்ளாட்சி அமைப்புகள், சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் பொதுமக்கள் முழு ஈடுபாட்டுடன் 100% வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வருகிறது. அதற்காக பல்லாயிரம் கோடிகளை விழிப்புணர்வுக்காக செலவிட்டு வருகிறது. இருப்பினும் ஆணையத்தின் தார்மீகக் கொள்கைகள் கடைபிடிக்கப்படுவதில்லை. எனவே, அரசும், பல்வேறு பொதுநல அமைப்புகளும் முன்னின்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். செயலாளர் சண்முகம் மற்றும் மாவட்ட பொறுப்பாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து பல்வேறு நிலைகளில் ஆலோசிக்கப்பட்டது. மேலும், கூட்டத்தில் தேனி மாவட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பாக குணசேகரன், பெருமாள், விஜயன், மாரிச்சாமி, மஞ்சுளாதேவி, ரூபாவதி, மாரியம்மாள், அன்புச்செல்வி, சாந்தி, சுரேஷ்பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்