தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நடைபெற்ற இலவச சட்ட உதவி முகாம்!!!
ஆண்டிபட்டியில் ஜீவன் டிரஸ்ட் மற்றும் குடிமக்கள் விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு சார்பாக இலவச சட்ட உதவி முகாம் மாவட்ட பொறுப்பாளர் P.முருகேசன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வழக்கறிஞர் விஜயராஜ், வழக்கறிஞர் இராமச்சந்திரன் ஆகியோர் போக்சோ சட்டம் இளைஞர்களை சீரழிக்கும் செல்போன்களால் ஏற்படும் சைபர் கிரைம் சட்டம், பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம், தீண்டாமை வன்கொடுமை தடுப்புச்சட்டம், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் போன்ற சட்டங்களின் விதிகள் தனி நீதிமன்றங்கள் மற்றும் திருதவி போன்றவை குறித்து தெளிவாக விளக்கினார்கள். மேலும், பாதிக்கப்படுவோர் வழக்கறிஞர்களின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டுமென வலியுறுத்தினார்கள். மேலும் முகாமில் பல்வேறு வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வழக்கின் தற்போதைய நிலை நீதிமன்றத்தில் செய்ய வேண்டிய மேல்முறையீடு கிடைக்க வேண்டிய நிவாரணம் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.வரும் காலங்களில் கிராம மக்கள் பங்களிப்புடன் கிராம அளவிலான சிட்ட விழிப்புணர்வு கூட்டங்களை மாவட்ட காவல் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவுடன் இணைந்து நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது, முகாமில் குடிமக்கள் விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு சார்பாக கண்ணன், பொன்மணி, மகாராஜன்.
சீனியப்பன், இவர்களுடன் ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் வீரன் சுக்ரா டிரஸ்ட் ரூபாவதி மற்றும் பாதிக்கப்பட்டோர் என பலர் கலந்து கொண்டனர்