புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் அருணா தமிழக அரசு பொதுமக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருவதாகவும் இதன் ஒரு பகுதியாக உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தின் படி புதுக்கோட்டை மாவட்டத்தின் மாநகராட்சி ஊராட்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முகாம் நடைபெற.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் அருணா தமிழக அரசு பொதுமக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருவதாகவும் இதன் ஒரு பகுதியாக உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தின் படி புதுக்கோட்டை மாவட்டத்தின் மாநகராட்சி ஊராட்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முகாம் நடைபெற இருப்பதாகவும் இந்த முகாமில் வழங்கப்படும் விண்ணப்பத்தை பொதுமக்கள் பூர்த்தி செய்து தங்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் திட்டங்கள் எதுவாக இருந்தாலும் அதை குறிப்பிட்டு பூர்த்தி செய்து வழங்க வேண்டும் எனவும் அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து திட்டம் பொதுமக்களுக்கு கிடைக்க வழிவகை செய்யப்படும் எனவும் ஒரு முகாமில் கலந்து கொள்ளாத பொதுமக்கள் மீண்டும் மற்றொரு முகாமில் கலந்து கொள்ளலாம் எனவும் புதுக்கோட்டை மாநகராட்சியை பொருத்தவரை இரண்டு வார்டுகளுக்கு மூன்று முகாம்களும் ஊராட்சி பகுதிகளில் ஒரு ஊராட்சி பகுதிகளில் இரண்டு முகாம்களும் நடத்தப்படும் எனவும் பல்வேறு வகையான அரசுத் திட்டங்களை பெறுவதற்கு பொதுமக்கள் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தார் மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் வழங்கும் கோரிக்கையின் மீது மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பட்டா போருதல் போன்ற மனுக்களில் நீர்நிலை புறம்போக்கு பகுதியில் மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் பட்டா வழங்க முடியாத சூழல் இருப்பதாகவும் ஒரு சில இடங்களில் நீதிமன்ற வழக்கு நடைபெற்று இருப்பதால் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க தாமதம் ஏற்படுவதாகவும் அதை விரைவாக முடிக்க அதிகாரிகள் முனைப்பு காட்டி வருவதாகவும் தெரிவித்தார் ஆட்சியர் அருணா
