சென்னை:வேளச்சேரியில் ரூபாய் 231 கோடியில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும்! மாநகராட்சி அறிவிப்பு!
சென்னை:
வேளச்சேரியில் ரூபாய் 231 கோடியில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும்! மாநகராட்சி அறிவிப்பு!
சென்னையில் நாளுக்கு நாள் மக்கள் தொகை வேகம் எடுத்து கொண்டே வருகின்றது! தமிழ்நாடு மற்றும் அதன் அண்டை மாநிலங்களிலிருந்து மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை தேடியும் தொழிலுக்காகவும் குழந்தைகளின் கல்விக்காகவும் அவர்களின் எதிர்காலத்திற்காகவும் மற்றும் படித்த இளைஞர்கள் வேலைக்காகவும் ஒவ்வொரு நாளும் சென்னையை நோக்கி படையெடுத்த வண்ணம் இருக்கின்றனர்! இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகரங்கள் நாளுக்கு நாள் பெரு நகரமாக உருவெடுத்துக் கொண்டே வருகிறது தமிழகத்தின் தலைநகரமாகவும் தொழில் நகரமாகவும் சென்னை இருப்பதால் , காலை முதலே சாலையில் வாகனங்கள் அதிக அளவில் அணிவகுத்த வண்ணம் செல்கிறது ஒவ்வொரு நாளும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன விற்பனையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது இதனால் சென்னை மத்திய பகுதி மட்டுமல்லாமல் புறநகரங்களிலும் வாகன நெரிசல்கள் எப்போதும் தொடர்ந்து காணப்படுகிறது இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர் வேளச்சேரி வழியாக அண்ணா சாலை செல்லும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் இந்த தொடர் போக்குவரத்து நெரிசலால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் இந்த போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவே கிண்டி சர்தார் பட்டேல் சாலை முதல் வேளச்சேரி குருநானக் கல்லூரி வரை ரூபாய் 231 கோடியில் புதிய மேம்பாலம் அமைக்க தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது! இந்த புதிய மேம்பாலம் இருவழிப்பாதையாக அமைய உள்ளது ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் அடுத்த 30 நாட்களுக்குள் இதற்கான டெண்டர் கூறுபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அதன் பின்னர் டெண்டர் இறுதி செய்யப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது இந்த மேம்பால பணிகள் அடுத்த ஆண்டு (2026)பிப்ரவரி மாதம் தொடங்கி ,2027 ஆம் ஆண்டு இறுதிக்குள் பாலப்பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது!
