அதிகரிக்கும், போலியாக சித்தரிக்கப்படும் தொழிற்சாலைகள் மற்றும் அரசு ஊழியர்களை – குறிவைக்கும் போலி சமூக ஆர்வலர்கள்

பண்டிகை காலம் வந்தாலோ அல்லது கட்சி பொதுக்கூட்டம் என்றாலோ தொழிற்சாலைகளையும் அரசு அதிகாரிகளையும் மிரட்டி பணம் பறிக்கும் சுற்றுச்சூழல் சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் பல சமூக விரோத கும்பல்கள் கிளம்பியுள்ளன. இவர்களை கட்டுப்படுத்த அரசு முன் வரவேண்டும் என்ற கோரிக்கையை உண்மையாக இயற்கைக்கும் சமுதாயத்திற்கும் பங்களிக்கும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களால் கோரிக்கையை விடப்பட்டுள்ளது.

இதனால் உண்மைக்கு புறம்பான செய்திகளையும் மற்றும் புகைப்படங்களையும் பரப்பி அதன் மூலம் ஆதாயம் தேடும் சில சமூக விரோத கும்பல்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் நோக்கில் வரும் வாரம் முதல்வரை நேரில் சந்தித்து சுற்றுச்சூழல் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்க உள்ளனர்.

சமீபத்தில் கும்மிடிப்பூண்டி, வேலூர், திருப்பூர், ஈரோடு மற்றும் செங்கல்பட்டு என பல்வேறு மாவட்டங்களில் தொழிற்சாலைகளின் புகை உமிழுவது போல போலியான புகைப்படங்களை சமூக விரோதிகளால் பல்வேறு ஊடகங்களில் செய்திகளை சித்தரித்து தொழிற்சாலைகள் மற்றும் அரசு ஊழியர்களை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கத்தில் அவர்களுக்கு சாதகமாக செய்தி சமூக ஊடகங்களில் சமூக விரோதிகளால் வெளியிட்டு வருகின்றது.

இது போன்ற செய்தி சமீபத்தில் கும்முடிபூண்டி மற்றும் வேலூரில் ஒரு குறிப்பிட்ட அரசு ஊழியரை பாதிக்கும் நோக்கில் செய்திகள் வெளியிடப்பட்டன. அந்த செய்தியை ஆராய்ந்து பார்த்ததில் எள்ளளவும் உண்மை இல்லை என தெரிய வருகிறது. இது போன்ற தவறான செய்திகளை பரப்பும் கயவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் வேண்டுதல் விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்