செய்யாமங்கலம் கோயில் திருவிழாவில் மாணவ, மாணவிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

இராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் அருகே செய்யாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் 3 மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பிரிட்ஜ், எல்இடி டிவி, சைக்கிள் வழங்கப்பட்டது. அதன்படி 10 ஆம் வகுப்பில் முதல் பரிசு பூஜா த / பெ புலி (எ) சுந்தர பாண்டியன், 404 / 500, மதிப்பெண்கள், இரண்டாம் பரிசு, சுப்பிரியா, த / பெ, ராமமூர்த்தி, 369 / 500, மதிப்பெண்கள், மூன்றாம் பரிசு, கோபிகா, த / பெ, கோவிந்தன், 368 / 500, மதிப்பெண்கள் எடுத்தனர்.

இதை போன்று 12 ஆம் வகுப்பில் முதல் பரிசு, லத்திகா, த / பெ, மலைச்சாமி, 493 / 600, மதிப்பெண்கள், இரண்டாம் பரிசு, அபர்ணா, த / பெ, முருகேசன், 450 / 600, மதிப்பெண்கள், மூன்றாம் பரிசு, அனிதாஸ்ரீ, த / பெ திருமுருகன், 436 / 600, மதிப்பெண்கள், ஆகிய மாணவ, மாணவிகளுக்கு கோயில் திருவிழாவில் பரிசுகள் வழங்கப்பட்டது. இதற்காக செய்யாமங்கலம் கிராம பொதுமக்கள் கல்விக்காக என்ற ஒரு வாட்ஸ் அப் தளத்தை உருவாக்கி அதன் மூலம் பொது மக்களிடம் நிதி திரட்டி இந்த பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. இதனை போன்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆண்டு தோறும் பரிசு பொருட்கள் வழங்கப்படும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்