வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் சி.எம்.டி.ஏ. சார்பில் கட்டப்பட்டு வரும் “கொளத்தூர் வண்ண மீன்கள் வர்த்தக மையம்”

சென்னை, வில்லிவாக்கம், சிவசக்தி நகரில், வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் சி.எம்.டி.ஏ. சார்பில் கட்டப்பட்டு வரும் “கொளத்தூர் வண்ண மீன்கள் வர்த்தக மையத்தின்” இறுதிக்கட்டப் பணிகளை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு நேரில் சென்று ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்குண்டான நடவடிக்கைகளை மேற்கொள்ள பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்தாரர்களை அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வெற்றி அழகன், சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர்/முதன்மைச் செயலாளர் கோ.பிரகாஷ், இ.ஆ.ப., கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளர் டாக்டர் ந.சுப்பையன், இ.ஆ.ப., மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் க.வீ.முரளிதரன், இ.ஆ.ப., மாநகராட்சி இணை ஆணையாளர் (சுகாதாரம்) முனைவர் வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப., மண்டலக் குழுத்தலைவர் கூ.பீ.ஜெயின், சிஎம்டிஏ தலைமைப் பொறியாளர் மகாவிஷ்ணு, மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர். பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், கண்காணிப்புப் பொறியாளர் ராஜன்பாபு, மாமன்ற உறுப்பினர் சுதா தீனதயாளன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
