இராமேஸ்வரம் – தங்கையிடம் சில்மிஷம் செய்த நபரை கொன்று புதைத்த அண்ணன்…

இராமேஸ்வரம் தங்கையிடம் சில்மிஷம் செய்த நபரை கொன்று புதைத்த அண்ணன் இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் தங்கையிடம் தகாத முறையில் நடந்து கொண்ட நபரை பெண்ணின் அண்ணன் கொலை செய்து புதைத்துள்ளார். இராமேஸ்வரம் வெண்மனி நகரைச் சேர்ந்த நம்புராஜா அவரது நண்பரான வெங்கடேசன் என்பவரின் தங்கையிடம் அத்துமீறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசன், நம்புராஜாவை தாக்கியுள்ளார். இதில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பின்னர் யாருக்கும் தெரியாமல் நம்புராஜா உடலை வெங்கடேசன் தனது வீட்டிற்கு அருகேயுள்ள பழை வீட்டின் அருகே புதைத்துள்ளார். தற்போது ஒரு மாதத்திற்குப் பிறகு வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் இவர் கொடுத்த தகவல் அடிப்படையில் புதைக்கப்பட்ட உடலை மீண்டும் தோண்டி எடுத்து மருத்துவர்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள் இது நம்புராஜா உடல் தானா என கண்டறிந்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்