முதுகுளத்தூரில் சாலை வசதி வேண்டி பொதுமக்கள் கோரிக்கை…
முதுகுளத்தூரில் சாலை வசதி வேண்டி பொதுமக்கள் கோரிக்கை இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியான சுவாமிகள் மடத்து தெருவில் சுமார் 70 வீடுகளும் சுமார் 300 மேற்பட்ட மக்களும் வசித்து வருகிறார். இந்த தெருவில் உள்ள மக்களுக்கு சரியான சாலை வசதி மற்றும் தெரு விளக்கு வசதியும், கழிவுநீர் செல்லும் கால்வாய் வசதி போன்ற எதுவுமே இல்லை. இதுகுறிப்பு இப்பகுதி மக்கள் பல முறை கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. தற்போது சில நாட்களாக மழை பெய்து வருவதால் சாலையில் மழைநீர் தேங்கி நடக்கமுடியாத சூழ்நிலை உள்ளது. அவசரத்துக்கு வாகனங்கள் கூட வரமுடியவில்லை. ஆகவே சுவாமிகள் மடத்து தெருவிற்கு அடிப்படை தேவையான சாலை, தெரு விளக்கு, கழிவுநீர் கால்வாய் போன்ற வசதிகளை பொதுமக்கள் நலன் கருதி விரைவாக அமைத்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்