ராமநாதபுரம் நீதிமன்ற வளாகத்தில் கர்ம வீரர் காமராஜர் இலவச இருதய பரிசோதனை முகாம்…
ராமநாதபுரம் மாவட்டம், ராம்நாட் கோரல் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் திருநெல்வேலி காவேரி மருத்துவமனையுடன் இணைந்து ராமநாதபுரம் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற ரோட்டரி கர்ம வீரர் காமராஜர் இலவச இருதய பரிசோதனை பேருந்து முகாம் ரோட்டரி சங்க தலைவர் அன்னபூர்ணாதேவி தலைமையில் நடைபெற்றது.மாவட்ட வழக்கறிஞர் சங்க தலைவர் அன்புச்செழியன் அனைவரையும் வரவேற்றார். ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிபதி மெஹபூப் அலிகான் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆளுநர் தேர்வு தினேஷ்பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். வழக்கறிஞர் சங்க செயலாளர் முத்து துரைச்சாமி நன்றி கூறினார்.