ராமநாதபுரம் மாவட்டம், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போக்குவரத்துறை சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தமிழக அரசின் 51 மினி பேருந்து விரிவான திட்டம் 2024 கொடியசைத்து துவக்கி வைத்தார்…
ராமநாதபுரம் மாவட்டம், ஆட்சியர் அலுவலக வளாகத்தில்
போக்குவரத்துறை சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தமிழக அரசின் 51 மினி பேருந்து விரிவான திட்டம் 2024 கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார்.ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம்,துணைத் தலைவர் பிரவீன் தங்கம்,சாயல்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம் முகைதீன்,மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இன்பா ரகு,வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஆனந்தன்,துணை வட்டார போக்குவரத்து ஆய்வாளர் செந்தில்குமார்,நேர்முக உதவியாளர் பாலமுருகன், இந்தத் திட்டமானது பொதுமக்களின் நலன் கருதி அதிக குடும்பங்களை கொண்ட கிராமங்கள்/குக்கிராமங்கள், குடியிருப்புகள் உள்ள மக்களுக்கு சாலை போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக இன்று துவக்கி வைக்கப்பட்டது.
