தோற்றாலும் எனக்கு இது வெற்றியே: மைக் டைசன்
ஆர்லிங்டன்: பிரபல அமெரிக்க குத்துச்சண்டை வீரரான மைக் டைசன், 58, சமூக ஊடகப் பிரபலமும் குத்துச்சண்டை வீரருமான ஜேக் பாலுக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தது குறித்து மௌனம் கலைத்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தப் போட்டியில் தாம் தோல்வி அடைந்தாலும் வெற்றி பெற்றதாகவே நினைப்பதாகச் சொன்னார்.
“அப்படி ஒரு சூழலில்தான் நான் இருக்கின்றேன். குத்துச்சண்டை போட்டியில் நான் கலந்துகொண்டதற்கு என்றும் நன்றியுணர்வுடன் இருப்பேன். நான் குத்துச்சண்டை களத்திற்கு கடைசியாக திரும்பியதை நினைத்து எனக்கு எந்த வருத்தமும் கிடையாது,” என்றார் டைசன்.
உடல்நலப் பிரச்சினை காரணமாக கடந்த ஜூன் மாதம் தாம் கிட்டத்தட்ட இறக்கும் நிலைக்குச் சென்றதாக அவர் பகிர்ந்தார்.
“கடந்த ஜூன் மாதம் நான் கிட்டத்தட்ட செத்துப் பிழைத்தேன். எனக்கு எட்டு முறை ரத்தம் ஏற்றப்பட்டது. என் பாதி ரத்தத்தை நான் இழந்தேன். அது மட்டுமின்றி, மருத்துவமனையில் இருந்தபோது 11 கிலோ வரை உடல் எடையை இழந்தேன்.
“இப்படிப்பட்ட நிலையிலிருந்து மீண்டும் உடல்நலம் தேறி குத்துச்சண்டை போட்டியில் நான் பங்கேற்று இருக்கிறேன். இதை நான் வெற்றியாகவே கருதுகின்றேன்,” என்றார் டைசன்.
“என் வயதில் பாதி கூட இல்லாத ஒரு வீரருடன் நான் முழுமையாக எட்டு சுற்றுகள் வரை நின்று குத்துச்சண்டையில் ஈடுபட்டதை என் குழந்தைகள் பார்த்து ரசித்ததை எந்தவொரு மனிதருக்கும் கிடைக்காத மிகப்பெரிய வரமாக நான் கருதுகிறேன். ரசிகர்களுக்கு என் நன்றி,” என்று டைசன் தம் பதிவில் குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலளித்த ஜேக் பால், 27, “உங்களுடன் மோதியது எனக்கு கிடைத்த கௌரவம். நீங்கள் எங்களுக்கெல்லாம் ஒரு முன்னோடி! உங்களை நாங்கள் நேசிக்கிறோம்,” எனப் பதிவிட்டுள்ளா