‘கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாடமி’-திறப்பு விழா

தமிழ்நாடு அரசின் முன்னெடுப்பில் நமது விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் சுமார் ரூ.8 கோடி மதிப்பில் சென்னை கோபாலபுரத்தில் கட்டப்பட்டுள்ள ‘கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாடமி’-ஐ இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் திறந்து வைத்த நிகழ்வில் உடன் பங்கேற்றோம்.
இப்புதிய அகாடமியில் நடைபெற்ற முதல் குத்துச்சண்டை பயிற்சிப் போட்டியை நம் முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.
கிட்டத்தட்ட 750 பேர் அமரக்கூடிய வகையில், நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள ‘கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாடமி’, தமிழ்நாடு விளையாட்டுத் துறை முன்னெடுத்து வரும் பணிகளில் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
சென்னையின் அடையாளங்களில் ஒன்றான குத்துச்சண்டை போட்டிகளை மேலும் ஊக்குவித்திடும் வகையில் இந்த அகாடமி செயல்படவுள்ளதில் மகிழ்ச்சியும் – பெருமிதமும் கொள்கிறோம்.
