முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

கும்பகோணம் அருகே கீழக்கொட்டையூர் வள்ளலார் பள்ளி இல்ல மாணவர்களுக்கு, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 77வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட கழக அம்மா பேரவை சார்பில், கும்பகோணம் முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் அழகு.த.சின்னையன் ஏற்பாட்டில் கும்பகோணம் மாநகர கழக செயலாளர் இராம.இராமநாதன் தலைமையில், மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட அம்மா பேரவை நிர்வாகிகள் நடராஜன், அறிவழகன், பகவதி, ரமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ஆர்.கே.பாரதிமோகன் மாணவர்களுக்கு மதிய உணவினை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் சோழபுரம் அறிவழகன், செம்மங்குடி முத்துகிருஷ்ணன், மாவட்ட பிரிவு செயலாளர்கள் இராஜேந்திரன், கஞ்சனூர் பிரபு, துணைச்செயலாளர் அருண்குமார், வட்ட கழக செயலாளர் ராஜீவ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத்தலைவர் மீனாட்சி சுந்தரம், குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்