நகைச்சுவை படங்களுக்கு என்றுமே மவுசு குறையாது என்பார்கள். காமெடியில் கலக்கிய, வசூலை குவித்த , மக்களின் மனதை கொள்ளை கொண்ட படங்கள் ஏராளம்.

நகைச்சுவை படங்களுக்கு என்றுமே மவுசு குறையாது என்பார்கள். காமெடியில் கலக்கிய, வசூலை குவித்த , மக்களின் மனதை கொள்ளை கொண்ட படங்கள் ஏராளம்.
மக்களால் ரசித்து சிரித்து கொண்டாடப்பட்ட படங்கள் வரிசையில் இன்று நம் கவலைகளை மறந்து சிரித்து மகிழ ஒரு படம் உருவாகி உள்ளது.
தயாரிப்பாளர் ஆறுமுகம் மாதப்பன் தனது எம். எல். புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் முதல் படமாக உருவாக்கி உள்ள “வசூல் மன்னன் ” படம் தான் அது.

கன்னக்கோல் படத்தை எழுதி இயக்கிய வேல் குமரேசன் தனது இரண்டாவது படமாக வசூல் மன்னன் படத்தை கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி உள்ளார்.

இப்படத்தைப் பற்றி வேல் குமரேசன் கூறும்பொழுது, “ஒருவன் தன் வாழ்நாளில் எதை வேண்டுமானாலும் இழக்கலாம், தன்னம்பிக்கையை மட்டும் இழந்து விடவே கூடாது என்பதை இப்படத்தின் மையக் கருவாக வைத்து, அதை நகைச்சுவையுடன் உருவாக்கி உள்ளதாகக் குறிப்பிட்டார். “

ஸ்ரீதேவா கதையின் நாயகனாக பவனி வர, அழகுப் பதுமை நிவேதா அவருக்கு ஜோடியாக வருகிறார். வேல ராமமூர்த்தி, இமான் அண்ணாச்சி , சரவண சுப்பையா, குட்டிப்புலி சரவண சக்தி, ரிந்து ரவி என நிறைய பேர் நடித்துள்ளனர்.

பரணி இசையமைத்து, ஒரு பாடலையும் எழுதி உள்ளார். இன்னொரு பாடலை நா.ப. சுப்ரமணியம் எழுதி உள்ளார். சிவகுமார் ஒளிப்பதிவையும், சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பையும், ராதிகா நடன பயிற்சியையும், சரவணன் கலையையும், கவனித்துள்ளனர். ஈஸ்வர் தயாரிப்பு நிர்வாகத்தையும், ஜவஹர் மாரிமுத்து தயாரிப்பு மேற்பார்வையையும் கவனித்துள்ளனர்.

எம்.எல்.புரொடக்சன்ஸ் சார்பில் ஆறுமுகம் மாதப்பன் .. ” வசூல் மன்னன் படத்தை தயாரிக்க, எழுதி இயக்கி உள்ளார் வேல் குமரேசன்.

தொடர்புடைய செய்திகள்