முதுகுளத்தூர் பேரூராட்சியில் வாரச்சந்தை 33 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டதுமுதுகுளத்தூர் ஜூலை 17இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சியின் வாரச்சந்தையின் ஏலம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.கடந்த ஆண்டு 19 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டன.

முதுகுளத்தூர் பேரூராட்சியில் வாரச்சந்தை 33 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது
முதுகுளத்தூர் ஜூலை 17
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சியின் வாரச்சந்தையின் ஏலம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.கடந்த ஆண்டு 19 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டன. இந்த ஆண்டுக்கான ஏலம் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு நடைபெற்றது இதில் இரண்டு ஒப்பந்ததாரர்கள் நேருக்கு நேர் மோதி கொண்டனர்.இதனால் வாரச்சந்தையின் ஏலம் ஒத்திவைக்கப்பட்டதுஇந்நிலையில் நேற்று வாரச்சந்தை யின் ஏலம் முதுகுளத்தூரில் உள்ள பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் செல்வராஜ் முன்னிலை நடைபெற்றது.இதில் 12 ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர்.வாரச்சந்தை கடையை 33 லட்சத்திற்கு காடமங்களம்சப்பானி என்ற முருகன் ஏலம் எடுத்துள்ளார்.அவருக்கு பேரூராட்சி ஒப்பந்த ஆணையை பேரூராட்சி சார்பாக வழங்கப்பட்டன.
பேரூராட்சி வாரச்சந்தைக்கான ஏலத்திற்கு முதுகுளத்தூர் டிஎஸ்பி சண்முகம் தலைமையில் போலீசார் 50 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்திகள்