செங்கல்பட்டு மாவட்டம்,செய்யூர் வட்டம், செங்காட்டூர் கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ செங்கழுநீர் அம்மன் ஆலய ஜீரனோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது,

செங்கல்பட்டு மாவட்டம்,செய்யூர் வட்டம், செங்காட்டூர் கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ செங்கழுநீர் அம்மன் ஆலய ஜீரனோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது, கடந்த திங்கள்கிழமை தொடங்கி தொடர்ந்து வேள்வி பூஜைகள் நடத்தப்பட்டு நிறைவு நாளான இன்று மூன்றாம் நாளாக வேள்வி பூஜைகள் நடத்தப்பட்டது, மகா கணபதி ஓமம், லட்சுமி ஓமம்,ஸ்ரீ நவகிரக ஹோமம் நடைபெற்றது, இரண்டாம் கால விசேஷ,சந்தியாக பூஜை புதிய சிலைக்கு கண் திறத்தல்,விசேஷ மூலிகை ஹோமம், அருட்பிரசாதம் வழங்குதல், மூன்றாம் கால யாக பூஜை 108 வகையான மூலிகை திரவிய ஓமம் நடத்தப்பட்டது, செங்கழுநீர் அம்மன் விமான மூலவர் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மகா கும்பாபிஷேக நன்னீராட்டு பெருவிழா சிறப்பாக நடைபெற்றது,இதில் விழா குழுவினர்கள் மற்றும் முக்கிய விருந்தினர்கள், கிராம பொதுமக்கள், பக்த கோடிகள் அனைவரும் கலந்து கொண்டனர், சிறப்பு மிக்க அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்