2025 2026 ஆம் கல்வியாண்டிற்கான முதுகுளத்தூர் ஒன்றிய அளவிலான சதுரங்க போட்டிகள் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
2025 2026 ஆம் கல்வியாண்டிற்கான முதுகுளத்தூர் ஒன்றிய அளவிலான சதுரங்க போட்டிகள் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றிய அளவிலான சதுரங்க போட்டிகள் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் முதுகுளத்தூர் வட்டார அளவிலான பள்ளிகளில் இருந்து 11, 14, 17 மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட மாணவ மாணவிகள் பிரிவில் போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளை ஜமாத் தலைவர் காதர் முகைதீன் தலைமையிலும் கல்வி குழு தலைவர் காஜா நஜ்முதீன் தாளாளர்கள் ஜஹாங்கீர், காஜா கமரத்தின், பாசில் அமீன் முன்னிலையிலும் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பேரூராட்சி சேர்மன் ஷாஜகான் முதுகுளத்தூர், வட்டாட்சியர் கோகுல்நாத், வருவாய் ஆய்வாளர் தினேஷ், முதுகுளத்தூர் வட்டார தொடக்க கல்வி அலுவலர் முருகேஸ்வரி கலந்து கொண்டனர். வரவேற்புரையை தலைமையாசிரியர் காஜா நஜிமுதீன் குரைசி நிகழ்த்தினார். நன்றி உரையை உதவி தலைமை ஆசிரியை காமிலா பானு வழங்கினார். போட்டிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தொடங்கி வைத்தார். ஏற்பாடுகளை பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் பள்ளியின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 45 பள்ளிகளுக்கு மேலாகவும் அதிலிருந்து 150 க்கு மேற்பட்ட மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் கேடயமும் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது
