தஞ்சை வடக்கு மாவட்ட மாநகர தி.மு.க பொது உருப்பினர்கள் ஆலோசனைக் குழு கூட்டம்!



தஞ்சை:(பிப்.27.) கும்பகோணத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட மாநகர தி.மு.க. கழக பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை 4 மணியளவில் கும்பகோணம் காந்தியடிகள் சாலையில் தனியார் திருமண மண்டபத்தில் கும்பகோணம் மாநகர துணை மேயர் சு,ப, தமிழழகன், மற்றும் அவைத் தலைவர் எஸ்,வாசுதேவன்.EX.M.C. தலைமையில் நடைபெற்றது, இதில் பிரியம், ஜே, சசிதரன் மாநகரக் கழக துணை செயலாளர் வரவேற்புரை ஆற்றினார், எஸ், ரவிச்சந்திரன், எம், சிவானந்தம், டி, செந்தாமரை, ஆகியோர் இக்கூட்டத்திற்கு முன்னிலை வகித்தனர், மேலும் இக்கூட்டத்திற்கு கல்யாண சுந்தரம் தஞ்சை வடக்கு மாவட்ட கழக செயலாளர், மற்றும் முனைவர் கோ.வி. செழியன் தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர், ஆகியோர் கருத்துரை ஆற்றினர், மேலும் தலைமை செயற்குழு உறுப்பினர் செ,இராமலிங்கம், சாக்கோட்டை அன்பழகன், சட்டமன்றத் தொகுதி மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர், சி.க. மறைமலை ஆகியோர் மேற்பார்வையில் இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டது, இதில் முக்கிய தீர்மானமாக கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளான மார்ச் 1, அன்று மனிதநேய திருநாளாக கொண்டாடும் வகையில் மாநகரின் அனைத்து வட்டங்களிலும் மாணவர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற முதியோர்கள், உள்ளிட்ட பொதுமக்களுக்கு இனிப்புகளோடு நலத்திட்டங்கள் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், மாநகர தி.மு.க. கழகம் சார்பில் மாபெரும் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடத்துவது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது, மேலும் தமிழ்நாட்டின் அடிப்படையான இருமொழி கொள்கையே தமிழகத்திற்கு போதும் எனவும் ஓர் இனத்தை அழிக்க முதலில் அந்த இனத்தின் மொழியை அழி என்ற பாசிசவாதிகளின் கொக்கறிப்பை அடக்குவோம் எனவும் மெல்ல மெல்ல ஹிந்தியை திணிக்க முயலும் மும்மொழி கொள்கையை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானமாக சூளுரையாற்றப்பட்டது, இதைத் தொடர்ந்து நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வரும் தமிழ்நாட்டை கல்வி நிதி பகிர்வு என அனைத்திலும் வஞ்சிக்கும் ஒன்றிய அரசை மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டின் ஜனநாயக குரலை நசுக்க நினைக்கும் ஒன்றிய மைனாரிட்டி பா.ஜ.க. அரசை இக்கூட்டத்தில் வன்மையாக கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, மேலும் கூட்டத்தில் கும்பகோணம் மாநகர மாமன்ற உறுப்பினர்கள், ரா, தட்சிணாமூர்த்தி, ரா, அசோக் குமார், எல், ராஜேந்திரன், டி ஆர், ஆனந்த ராமன், ஆர், முருகன், க, செந்தில்குமார், ஆர், ராஜேஷ்குமார், கே, வி, ஆர், சந்தோஷ்,என அனைவரும் கலந்து கொண்டனர், நிகழ்ச்சியின் முடிவில் மு, கண்ணன் 4வது பகுதி செயலாளர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்,