இந்திய திருநாட்டின் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 75வது பிறந்த நாளில் இயன்முறை பிசியோதெரபி மருத்துவ முகாம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் மேற்கு ஒன்றியம் சுற்றுச்சூழல் பிரிவு சார்பாக யுவராஜ் தலைமையில் இந்திய திருநாட்டின் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 75வது பிறந்த நாளில் பாரதிய ஜனதா கட்சியின் காட்டாங்குளத்தூர் மேற்கு ஒன்றியத்தில் உள்ள புலிப்பாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் அருகில் இலவச இயன்முறை பிசியோதெரபி மருத்துவ முகாம் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் ரகுராமன் கலந்துகொண்டு முகாமை துவக்கி வைத்து காட்டாங்குளத்தூர் ஒன்றிய தலைவர் விஜயகுமார் முன்னிலையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பொது மக்களுக்கு சர்க்கரை அளவு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.

மேலும் நான்கு சக்கர வாகனங்களுக்கு இலவச புகை பரிசோதனை வாகன ஓட்டிகளுக்கு செய்து கொடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் சௌபாக்யா முரளி, மாவட்ட செயலாளர் கஜேந்திரன், நகர தலைவர் மகேஸ்வரன், நகரத் துணைத் தலைவர் கவிதா மற்றும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர, மகளிர் அணியினர், கிளை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 75வது பிறந்தநாளில் சிறப்பான முறையில் முகாமில் பொதுமக்களோடு கொண்டாடி மகிழ்ந்தனர்.

தொடர்புடைய செய்திகள்