வைகை அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு…

வைகை அணையில் இருந்து பெரியாறு பாசன பகுதியில் ஒரு போக பாசன பரப்பாகிய 85,563 ஏக்கர் மற்றும் திருமங்கலம் பிரதான கால்வாய் 19.439 ஏக்கர் நிலங்களுக்கு என ஆக மொத்தம் 1,05,002 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் தண்ணீரை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி அவர்கள் திறந்து வைத்தார். இதன்மூலம் மதுரை, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை மாவட்ட விவசாயிகள் பயன்பெறுவர்.

இந்நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் கே ஜே பிரவீன்குமார் அவர்கள், தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்சித்சிங் , திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் , தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ் செல்வன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்