ரூ.5.27 கோடி மதிப்பீட்டில் 20 கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்டுவதற்கு காணொளிக்காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்கள்.

பெரம்பலூர் மாவட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பெரம்பலூர் மாவட்டத்தில் ஐந்து பள்ளிகளில் ரூ.5.27 கோடி மதிப்பீட்டில் 20 கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்டுவதற்கு காணொளிக்காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்கள்.

அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி இ.ஆ.ப.,பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் ஆகியோர் எளம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறைக்கட்டடம் கட்டப்படவுள்ள இடத்தைப் பார்வையிட்டு பணிகளை தொடங்கி வைத்தார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் மாணவ மாணவிகளின் கல்வியை மேம்படுத்த, அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம், அன்புக்கரங்கள் திட்டம், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ் புதல்வன், உயர்வுக்கு படி என மாணவர்களின் பள்ளிக்கல்விக்கும், உயர்கல்விக்கும் எண்ணிலடங்கா திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள்.

அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் ரூ.310 கோடி மதிப்பீட்டில் பாரத சாரண சாரணியர் தலைமை அலுவலகக் கட்டடம் மற்றும் தமிழ்நாடு முழுவதும் 263 புதிய கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள், உள்ளிட்ட கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.122 கோடியில் கட்டப்பட்டுள்ள 76 புதிய கட்டடங்களை திறந்து வைத்தார்.இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் எளம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூபாய் 103.16 லட்சம் மதிப்பீட்டில் 4 வகுப்பறைக் கட்டட பணிகளுக்கும், அரும்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூபாய் 123.30 லட்சம் மதிப்பீட்டில் 4 வகுப்பறைக் கட்டடம் மற்றும் 2 கழிவறை கட்டடங்களுக்கும், சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 78.42 லட்சம் மதிப்பீட்டில் 3 வகுப்பறைக் கட்டடம் மற்றும் குடிநீர் வசதிகளும், சத்திரமனை அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 148.29 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறைக் கட்டடம் மற்றும் 1 ஆய்வகக் கட்டடங்களுக்கும், பசும்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 73.82 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறைக் கட்டடம் மற்றும் 2 கழிவறை கட்டடங்கள் என மொத்தம் ரூபாய் 526.99 லட்சம் மதிப்பிலான புதிய கட்டடங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்கள்.

அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி இ.ஆ.ப., பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் ஆகியோர் எளம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறைக் கட்டடம் கட்டப்படவுள்ள இடத்தைப் பார்வையிட்டு பணிகளை தொடங்கி வைத்தார்கள்.

இந்நிகழ்வில் அட்மா தலைவர் வீ.ஜெகதீசன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வேலுச்சாமி, முன்னாள் சட்டமன்றஉறுப்பினர்ராஜ்குமார், உதவி பொறியாளர் பாலன், ஒருங்கிணைந்த உதவி திட்ட அலுவலர் (பள்ளிக்கல்வித்துறை) வெங்கடேஷன், நகர்மன்றதுணைத்தலைவர் ஆதவன், தலைமை ஆசிரியர் ராணி உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்