போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாமினை பார்வையிட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பெரம்பலூர் வட்டம், குரும்பலூர் அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமினை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி இ.ஆ.ப., தலைமையில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலையில் பார்வையிட்டு, மருத்துவ முகாமிற்கு வந்திருந்த நபர்களின் குறைகளை கேட்டறிந்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் நலம் காக்கும் ஸ்டாலின் என்ற மருத்துவ முகாமினை தமிழ்நாடு முழுவதும் 02.08.2025 அன்று தொடங்கி வைத்தார்கள். குரும்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட மக்களுக்கு, குரும்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் 17 உயர் சிறப்பு மருத்துவ பிரிவுகளை சார்ந்த மருத்துவர்களை கொண்டு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை வழங்குவதற்கும், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குவதற்கும் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான அடையாள அட்டை வழங்குவதற்கும் சம்பந்தப்பட்ட துறை வாயிலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்முகாமினை பார்வையிட்ட போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர்மருத்துவ முகாமிற்கு வருகை தந்த பொதுமக்களிடம் தமிழ்நாடு முதலமைச்சர் தாங்கள் உங்கள் நலன் காத்திடும் வகையில், உங்கள் ஊருக்கே மருத்துவக் குழுவினைரை அனுப்பி வைத்து, எல்லா விதமான மருத்துவப் பரிசோதைனையும் செய்து உயர் சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் உயர் சிகிச்சை வழங்க உத்தரவிட்டுள்ளார்கள். இந்த வாய்ப்பை மக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
பொதுமக்களுக்கு மருத்துவ சேவை வழங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த 17 உயர் சிறப்பு மருத்துவ பிரிவு அரங்குகளையும் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் பார்வையிட்டார்.
இன்றைய முகாமில் முழு உடல் பரிசோதனை செய்த நபர்களுக்கான உடனடியாக மருத்துவ அறிக்கையினையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 05 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளும், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் தலா ரூ.2,000 மதிப்பில் 10 கர்ப்பிணித்தாய்மார்களுக்கு ரூ.20,000 மதிப்பீட்டிலான ஊட்டச்சத்து பெட்டகமும், தொழிலாளர் நலத்துறை சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு ரூ.20,000த்திற்கான திருமண உதவித்தொகைக்கான ஆணையும், கல்விக்கடனுதவி 1 பயனாளிக்கு ரூ.7,000மும், 1 பயனாளிக்கு ரூ.5,000ம், என மொத்தம் ரூ.52,000 மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு, வருவாய் கோட்டாட்சியர் அனிதா, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.கீதா, அட்மா தலைவர் வீ.ஜெகதீசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் பாஸ்கரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.