போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் 36 மாணவர்களுக்கு ரூ.2.74 கோடி மதிப்பிலான கல்விக் கடன் உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி இ.ஆ.ப., தலைமையில் வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகள் இணைந்து நடத்திய கல்விகடன் முகாமினை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி இ.ஆ.ப., தலைமையில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலையில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக துணை மருத்துவ அறிவியல் கல்லூரி கூட்ட அரங்கில் தொடங்கி வைத்து கடனுதவிகளை வழங்கினார்.

இம்முகாமில், பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு கல்விக் கடன் வேண்டி 421 மனுக்கள் வழங்கினர். இம்முகாமில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது : மாணவ, மாணவிகளின் உயர்கல்விக்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருந்துவிடக்கூடாது என்ற உயரிய நோக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் போன்ற பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். அதன் ஒரு பகுதியாக கல்விக்கடன் முகாம்களை தொடர்ந்து நடத்திடவும் அறிவுறுத்தியுள்ளார்கள். அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பல கட்டங்களாக கல்விக்கடன் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. கடந்த நான்காண்டுகளில் மட்டும் 1420 மாணவ, மாணவிகளுக்கு ரூ.52.31கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாது இன்றைய முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட வங்கிகள் உரிய பரிசீலனை செய்து மாணவர்களின் உயர்கல்விக்கு வழிவகுக்கும் வகையில் கடனுதவிகளை வழங்கிட வேண்டும்.இவ்வாறு தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, இம்முகாமில் தேர்வு செய்யப்பட்ட 36 மாணவ, மாணவிகளுக்கு ரூ.2.74 கோடி மதிப்பீட்டில் கல்வி கடனுக்கான ஆணைகளை போக்குவரத்துத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு, வருவாய் கோட்டாட்சியர் அனிதா, அட்மா தலைவர் வீ.ஜெகதீசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பரத் குமார் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்