சிறப்பு குழந்தைகளுக்கான கற்றல் மற்றும் சிகிச்சை மையம்(CWSN – Children With Special Needs)மேயர் இந்திராணி பொன்வசந்த் திறந்து வைத்து பார்வையிட்டார்.

மதுரை மாநகராட்சி மறைமலை அடிகளார் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் சிறப்பு குழந்தைகளுக்கான கற்றல் மற்றும் சிகிச்சை மையத்தை மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் சித்ரா விஜயன், இ.ஆ.ப, ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டார்கள்.

மதுரை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் 64 பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அப்பள்ளிகளில் சுமார் 300 க்கும் மேற்பட்ட மாற்றுத் திறன் கொண்ட (CWSN- Children With Special Needs) மாணவர்கள் பயின்று வருகிறார்கள். மறைமலை அடிகளார் உயர்நிலைப் பள்ளியில் 30-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இம்மையத்தில் பயிற்சி அளிப்பதற்கு 3. A r 1 Occupational Therapist, 1 Physiotherapist, 1 மைய பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். சிறப்பு பயிற்றுநர்கள் மற்றும் தெரபிஸ்ட்கள் நேரடியாக பள்ளிகளில் சென்று, மாணவர்களின் கல்வி முன்னேற்றம் மற்றும் ஆரோக்கியத்திறனை கண்காணித்து, தேவையான உதவிகளை வழங்குவார்கள்.

இந்த மையம் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் கல்வி மற்றும் சுகாதார ஆதரவை வழங்கும் முக்கிய முயற்சியாக அமைந்து உள்ளது. மறைமலை அடிகளார் உயர்நிலைப்பள்ளியில் புதிய CWSN சிறப்பு கல்வி மற்றும் சிகிச்சை மையத்தை மேயர், ஆணையாளர் ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டார்கள். தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளில் முதல் முறையாக மதுரை மாநகராட்சி பள்ளிகளில் “சிறப்பு குழந்தைகளுக்கான கற்றல் மற்றும் சிகிச்சை மையம்” திறந்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மதுரை மாநகராட்சியின் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும், ஐ.ஐ.டி.மெட்ராஸ் வழக்கும் IIT School Connect Programme”
எனும் சிறப்புத் திட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இத்திட்டம் மாணவர்களின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்துவதற்காக அமைக்கப் பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மதுரை மாநகராட்சியின் 24 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் பங்கேற்கின்றன. இதில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பில் பயிலும் மாணவ, மாணவிகளுக்காக இரண்டு மாத கால சிறப்பு பயிற்சிகள் நடைபெற உள்ளன. இந்த ஐ.ஐ.டி. ஸ்கூல் இணைப்பு திட்டத்தின் மூலம் மாணவர்கள் தங்களின் மேல்நிலை கல்வி முடிந்தபின் கல்லூரியில் தெரிவு செய்யும் துறைப்பாடத்திற்கு ஏற்ப 10 வகையான தொழில்நுட்ப அடிப்படை பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அவற்றில் 1) Introduction to Data Science and Artificial Intelligence. 2) Introduction to Electronics Systems, 3) Introduction to Engineering Biological Systems மற்றும் இதனைத் தொடர்ந்து பல புதுமையான பாடப்பிரிவுகள் அடங்கும்.

மதுரை மாநகராட்சி பள்ளிகளில் இருந்து 211 மாணவ. மாணவிகள் இப்பயிற்சிகளுக்காக பதிவு செய்துள்ளனர். அவற்றில் அதிகபட்சமாக Introduction to Data Science and AI என்ற பாடப்பிரிவில் 142 மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். மாணவர்கள் தங்களது பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள ஹைடெக் லேப் (உயர் தொழில்நுட்ப ஆய்வுக்கூடங்கள்) மூலம் இப்பயிற்சிகளில் நேரடியாக கலந்து கொள்வார்கள். இப்பயிற்சிகளுக்கான கட்டணங்கள் முழுமையாக மதுரை மாநகராட்சியின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி முதல் இப்பயிற்சிகள் துவங்கி 2025 டிசம்பர் 1 ஆம் தேதி நிறைவடையும். இத்திட்டத்திற்கான தேர்வு டிசம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ளது. மாணவர்களுக்கு பயிற்சி சிறப்பாக நடைபெற ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு பொறுப்பு ஆசிரியர் (Nodel Teacher) நியமிக்கப்பட்டுள்ளனர். இத்திட்டம் மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தி, எதிர்கால உயர்கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளுக்கான வலுவான அடித்தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்வில் துணை மேயர் தி.நாகராஜன், கல்விக்குழுத்தலைவர் ரவிச்சந்திரன், கல்வி அலுவலர் ஜெய்சங்கர், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவிப்பொறியாளர் ஷர்புதீன், மாமன்ற உறுப்பினர் பானு உட்பட மாநகராட்சி அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்