தேனி மாவட்டம் போடி, உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.லட்சுமணன் தலைமையில் நடைபெற்றது.

தேனி மாவட்டம் போடி அருகே கொட்டகுடி ஊராட்சி குரங்கணி மலை கிராமத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ் லட்சுமணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தேனி பாராளுமன்ற உறுப்பினர், திமுக தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்து மனுக்கள் வழங்கிய பொது மக்களுக்கு பட்டா சான்றிதழ், மின்வாரிய புதுப்பித்தல் அட்டை, மருத்துவ காப்பீட்டு அட்டை மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு சத்துணவு பொருட்களை வழங்கினார்.

இந்த முகாமில் கொட்டக்குடி ஊராட்சியில் செல்போன் டவர் இல்லாததால் தகவல் சேவைகள் எதுவும் இல்லாமல் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர் என பொதுமக்கள் அளித்த மனுவின் அடிப்படையில் அதற்காக பெரிய செல்போன் நிறுவனத்தில் பேச்சுவார்த்தை நடத்தி கொட்டக்குடி ஊராட்சியில் செல்போன் டவர் அமைத்து பொதுமக்களுக்கு தகவல் சேவை கண்டிப்பாக தங்களது சொந்த செலவில் வழங்கப்படும் என தங்க தமிழ்ச்செல்வன் அவர்கள் மற்றும் லட்சுமணன் ஆகியோர் உறுதி அளித்தனர்.

இந்த முகாமில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மலர்விழி, பிரேமா மற்றும் ஊராட்சி செயலர் தங்கப்பாண்டி மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்