கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி…
கும்பகோணம் அருகே உள்ளூர் ஊராட்சி அரசு தொடக்கப் பள்ளியில் த,வெ,க, சார்பில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக வெற்றி கழகம் விஜய் ஆணைக்கிணங்க மற்றும் பொதுச் செயலாளர் ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி (ஏப்ரல் 16) இன்று கும்பகோணம் அருகே உள்ளூர் ஊராட்சி சௌதாம்பிகா நகர் அரசு தொடக்கப்பள்ளியில் தஞ்சை கிழக்கு மாவட்ட மாநகர மகளிர் அணி சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உடல்நிலை மேம்படுத்தும் விதமாக ஊட்டச்சத்து உணவு பொருட்கள் அடங்கிய பெட்டகம் வழங்கப்பட்டது. இதில் உலர் திராட்சை, பேரிச்சம்பழம், பாதாம், பிஸ்தா, முந்திரி, அடங்கிய பெட்டகத்தை தஞ்சை கிழக்கு மாவட்ட செயலாளர் வினோத் ரவி தலைமையில் மாவிட்ட மகளிர் அணி தலைவி அஞ்சனா பாலாஜி, மற்றும் மாநகரம் மகளிர் அணி தலைவி திவ்யலட்சுமீ வழங்கினார்கள், இந்நிகழ்வில் மாநகர செயலாளர் வீரா விஜயகுமார் உட்பட த.வெ.க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.