ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்ட விழா…
ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேரோட்ட விழா – முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு நடைபெற்றது 108 வைணஸ் தலங்களில் முதன்மையானதும் பூலோக வைக்கும் அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்ட விழாவை முன்னிட்டு கிழக்கு சித்திரை வீதியில் உள்ள சித்திரை தேரில் முகூர்த்தக்கால் நடும் விழா இன்று நடைபெற்றது. அதுசமயம் கோவில் அர்ச்சகர்கள் வேதங்கள் சொல்ல முகூர்த்தகாலில் புனிதநீர் தெளித்து, சந்தனம் பூசி, முகூர்த்தக்காலின் நுனியில் மாவிலை, பூமாலை உள்ளிட்ட மங்கபொருட்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன் பின்னர் மிதுன லக்னத்தில் முகூர்த்தக்காலை தேரில் கோவில் அர்ச்சகர்கள், அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் நட்டனர். அப்போது கோவில் யானை ஆண்டாள் தும்பிக்கையை உயர்த்தி மரியாதை செலுத்தியது. இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.