தென்றல் நகரில் கடந்த ஆறு மாதத்திற்கு மேலாக குடிநீர் வராமல் மக்கள் அவதி…
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் பார்த்திபனூர் அருகில் நெல்மடூர் ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள தென்றல் நகரில் கடந்த ஆறு மாதத்திற்கு மேலாக குடிநீர் வராமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். பார்த்திபனூர் முதல் அருப்புக்கோட்டை ரோடு இடையே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி இணைக்கும் இணைப்பு பாலம் கட்டப்பட்டு வருவதன் காரணமாக தண்ணீர் வரவில்லை தண்ணீர் வரும் குழாயை கண்டறியப்படவில்லை என்று அரசு அதிகாரிகள் அலட்சியமாக தெரிவித்துள்ளனர். இது குறித்து பரமக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடம் கிராம மக்கள் முறையாக தகவல் தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. என்று வேதனையுடன் தெரிவிக்கின்றனர், தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் தண்ணீரின் தேவையும் அதிகமாக உள்ளது. குடிநீர் விலைக்கு வாங்கும் நிலை உள்ளது எனவே பொது மக்களின் நலன் கருதி இப்பகுதிக்கு வரும் தண்ணீர் குழாயை கண்டறிந்து அல்லது புதியதாக குழாய் பதித்து தினமும் தண்ணீர் கிடைக்க மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜித் சிங் காலோன் மற்றும் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்தனர்.