பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை வருகின்ற மே மாதம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக…

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் திருச்சிராப்பள்ளி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை வருகின்ற மே மாதம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க உள்ளதை முன்னிட்டு அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார்,இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இந்நிகழ்வில், மாநகராட்சி ஆணையர் வே.சரவணன்,இ.ஆ.ப., நகரப் பொறியாளர் .சிவபாதம், மாநகராட்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்