சொகுசு காரில் கடத்திவரப்பட்ட 556 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்..
கும்பகோணம் அருகே சொகுசு காரில் கடத்திவரப்பட்ட 556 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்.. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கொட்டையூர் பகுதியில் கிழக்கு காவல் ஆய்வாளர் சிவ செந்தில் குமார் தலைமையிலான காவலர்கள் வாகன சோதனையில் வியாழக்கிழமை நேற்று மாலை ஈடுபட்டனர், அப்பொழுது அந்த வழியாக வந்த சொகுசு கார் ஒன்று நிற்காமல் சென்றுள்ளது. உடனே அந்த காரை விரட்டி பிடித்து சோதனை செய்ததில் ரூ.10, லட்சம் மதிப்பிலான 556 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மூவரை போலீசார் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் கும்பகோணம் அருகே அரியத்திடல் பகுதியை சேர்ந்த பீரகாஷ் 40, என்பவரும் சென்னையை சேர்ந்த ரோனக் சிங் வயது 22, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மோகித் வைஷ்ணவ், 27, என தெரியவந்துள்ளது, மேலும் பிரகாஷ் என்பவர் கும்பகோணம் பகுதியில் தொடர்ந்து குட்கா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து ஒரு சொகுசு கார், மற்றும் 10 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்காவை கிழக்கு காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.