கமுதி பேரூராட்சியில் தேங்கிநிற்கும் கழிவுநீர் வாறுகாலை சுத்தம் செய்யகோரி தவெக சார்பில் மனு…

கமுதிபேரூராட்சியில் தேங்கிநிற்கும் கழிவுநீர் வாறுகாலை சுத்தம் செய்யகோரி தவெக சார்பில் மனு தமிழக வெற்றிக்கழகத்தின் இராமநாதபுரம் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆ மன்மதன் அவர்கள் நேரில் மேற்பார்வையிட்டு கமுதி பேரூராட்சி நகர் கௌரவ தொடக்கப்பள்ளி முன்புறம் கழிவு நீர் தேங்கி நிற்பதால் சுகாதாரகேடு ஏற்படுகின்றது மேலும் கமுதிசுற்று வட்டார பகுதிகளில் 8இடங்களுக்கு மேல் கழிவு நீர் தேங்கி நிற்பதால் அதனையும் சுத்தம் செய்து தருமாறும் மேலும் அனைத்து வாறுகால்களையும் அள்ளி சுத்தம் செய்யவேண்டும்என கோரும்மனு கமுதி பேரூராட்சியில் தமிழக வெற்றி கழகம் ராமநாதபுரம் மேற்கு மாவட்டம் சார்பாக இன்று கொடுக்கப்பட்டுள்ளது அப்போது நிர்வாகிகள் மாவட்ட பொருளாளர் கிஷோர் குமார் மற்றும் கமுதி ஒன்றிய செயலாளர் காமேஷ் மகாதேவன் மற்றும் நிர்வாகிகள் முனியாண்டி சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்

தொடர்புடைய செய்திகள்