திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்…
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார்,இ.ஆ.ப.,தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட வன அலுவலர்கள் கிருத்திகா, இ.வ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் ர.ராஜலட்சுமி,வேளாண்மை துறை இணை இயக்குநர் வசந்தா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயராணி, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் கந்தசாமி, தோட்டக்கலை துணை இயக்குநர் சரண்யா, உள்ளிட்ட அரசுத்துறைகளின் உயர்அலுவலர்கள், விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.