கோயம்புத்தூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்…
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (25.04.2025) விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.மோ.ஷர்மிளா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திரு.அழகிரி, இணை இயக்குநர் (வேளாண்மை) திருமதி.கிருஷ்ணவேணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு.ஆனந்தகுமார், துணை இயக்குநர் (தோட்டக்கலைத்துறை) திரு.சித்தார்த்தன், மற்றும் அரசு துறை அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.