கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் பட்டாசு வெடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து தலா 3 இலட்சம்…
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டம், கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் பட்டாசு வெடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட தலா 3 இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியினை சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வழங்கினார்கள். உடன், மாவட்ட, ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., மேட்டூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமார் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் உள்ளனர்