முதுகுளத்தூர் பகுதியில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் மின்தடை, மக்கள் அவதி…
முதுகுளத்தூர் பகுதியில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் மின்தடை, மக்கள் அவதி இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் கடந்த சில நாட்களாக எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் வீட்டில் இருக்கும் பொது மக்கள் மற்றும் சிறு தொழில் செய்யும் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மழை பெய்யும் போது பொது மக்கள் பாதுகாப்பு கருதி மின்சாரம் தடை செய்யப்படுவது வழக்கம். ஆனால் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் போதும் தற்போது மூன்று தினங்களாக மழை பெய்யும் போதும் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. எதனால் மின்தடை ஏற்படுகிறது என்ற தகவலும் மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவிப்பதில்லை. இதனால் பொது மக்கள் கடந்த சில நாட்களாக அடிக்கடி ஏற்படும் மின்தடையினால் சிரமம் அடைந்து வருகின்றனர். இதற்கு மின்சாரம் வாரிய அதிகாரிகள் முடிந்த வரை அடிக்கடி மின்தடை
ஏற்படாமல் இருக்க உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்