சங்ககிரியில் குற்றச்செயல்களைத் தடுக்கும் வகையில் காவலர்கள், போலீஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது…
சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதிகளில் குற்றச்செயல்களைத் தடுக்கும் வகையில் காவலர்கள், போலீஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. துணை போலீஸ் சூப்பிரண்டு சிந்து தலைமையில், போலீசார் ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதேபோன்று மேட்டூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் தலைமையில் கொளத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பாலமலை கிராமத்தில் காவலர் அணிவகுப்பு நடத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டி விழிப்புணர்வு நடைபெற்றது.