மேட்டூர் அணையில் உரிமம் இன்றி பிடிக்கப்பட்ட 500 கிலோ மீன்கள் பறிமுதல்…
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் உரிமம் இன்றி மீன்களை பிடித்து சரக்கு வாகனத்தில் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்வதாக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கொளத்தூர் அருகே அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் 500 கிலோ மீன்கள் இருந்ததை கண்டறியப்பட்டது…இதுகுறித்து டிரைவரிடம் விசாரணை நடத்தி அதிகாரிகள் மீனுடன் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்து மீன்களை மேட்டூர் மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்