முதுகுளத்தூரில் வெறிநாய் கடித்ததில் இரண்டு வயது குழந்தை படுகாயம்…
முதுகுளத்தூரில் வெறிநாய் கடித்ததில் இரண்டு வயது குழந்தை படுகாயம். நடவடிக்கை எடுக்க WIM நகர் தலைவர் கோரிக்கை இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சி பகுதிகளில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெறி நாய் தொல்லை. இது குறித்து பொது மக்கள் பல முறை புகார் அளித்தும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் இன்று திடல் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த அசரப்அலி அவர்களின் மகன் அப்துல் வாஹித் இரண்டு வயது கூட ஆகாத சிறு குழந்தையை வெறிநாய் முகத்தில் கடித்து குதறியது. இதில் படுகாயம் அடைந்த குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். பேரூராட்சியில் பஜார் மற்றும் பேருந்து நிலையம், திடல் தெரு, செல்லி அம்மன் கோவில் தெரு, மற்றும் முக்கியவீதிகளில், வெறி நாய்கள் ரோட்டில் நடந்து செல்பவர்களையும் இருசக்கர வாகனத்தில் செல்லுபவர்களையும் வீரட்டி கடிக்க பாய்கின்றன. இரவு நேரங்களில் ரோட்டின் ஓரத்தில் கூட்டமாக படுத்து உறங்கும் நாய்கள் தனியாக நடந்து செல்பவர்களை அச்சுறுத்தும் வகையில் ஒன்று சேர்ந்து குரைக்கின்றன. மற்றும் இரவு நேரத்தில் கூட்டமாக நாய்கள் சாலையில் சுற்றித்தெரிகிறது. இதனால் இருச்சக்கர வாகனத்தில் செல்பவர்கள், பீதி அடைகின்றனர். இந்நிலையில் வெறி நாய்களை கட்டுப்படுத்த பொது மக்களின் புகார்களை பேரூராட்சி நிர்வாகம் கண்டுகொள்வதாக தெரியவில்லை. இந்த அவலநிலை தொடராமல் வெறிநாய்களிடம் இருந்து பொது மக்களை பாதுகாக்க மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதுகுளத்தூர் WIM நகர் தலைவர் S. ஆமீனா பெனாசிர் கோரிக்கை விடுத்துள்ளார்.