சமத்துவ கல்லறை வேண்டி கிறிஸ்துவர்கள் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு…

சமத்துவ கல்லறை வேண்டி கிறிஸ்துவர்கள் மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைப்பெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டத்தில், கோவிலம்பாக்கம் கிறிஸ்தவ நல சங்கம் சார்பாக பொது கல்லறை வேண்டி மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் யிடம் கோரிக்கை மனு அளித்தனர். செங்கல்பட்டு மாவட்டம் கிறிஸ்துவ மக்கள் நலச்சங்கம் சார்பில் கோவிலம்பாக்கம். நன்மங்கலம் பகுதியைச் சார்ந்த 100 க்கும் மேட்ட கிறிஸ்துவ மக்கள் தங்களுக்கு பொது கல்லறை வேண்டுமெனவும்.ஏற்கனவே தாங்கள் மேடவாக்கம் கல்லறையில் இறந்த கிறிஸ்துவர்கள் அடக்கம் செய்து வந்த நிலையில். தற்பொழுது மோடவாக்கத்தில் அடக்கம் செய்ய கூடாது என கூறுவதால் தங்களுக்கு பொது கல்லறை கேட்டு மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு அளித்தனர் இதில் கோவிலம்பாக்கம் கிறிஸ்தவ நல சங்கம் சார்பில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் அவர்களிடத்தில் மனு அளித்தனர் மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்