திருச்சிராப்பள்ளி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூபாய் 7500 மதிப்பீட்டில் காதொலிக்கருவிகளும் …

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (28.04.2025) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூபாய் 7500 மதிப்பீட்டில் காதொலிக்கருவிகளும், மாவட்ட ஆட்சித்தலைவரின் தன்விருப்ப நிதியிலிருந்து 1 பயனாளிக்கு ரூபாய் 2000 க்கான காசோலையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப்குமார்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ர.ராஜலட்சுமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.இரா.இரவிச்சந்திரன், அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்