விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நூல்கள் வெளியீட்டுவிழா…
நூல்கள் வெளியீட்டுவிழா விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்ற, விருதுநகர் மாவட்டத்தின் பலதரப்பட்ட துறைகளின் வரலாற்றை பறைசாற்றும் வகையில் கலை, இலக்கியம், பண்பாடு மற்றும் வணிகம் தொடர்பான நூல்கள் வெளியீட்டு விழாவில் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னசு அவர்கள் கலந்துகொண்டு,

- Heritage Monuments of South Tamil Nadu An Overview,
- Inscriptions in Virudhunagar District A Study.
- திருக்குறள் என்றைக்குமான இலக்கியம்.
- சங்க இலக்கியமும் இளையோரும் மற்றும் மக்கள் இலக்கியம் சிலப்பதிகாரம்
- 100 ஆண்டுகளின் வணிக ஆளுமைகள் – விருதுநகர் மாவட்டம் ஆகிய புத்தகங்களை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார் மேலும் சான்றிதழ்களையும் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் , மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் , சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் அரசு துறை அதிகாரிகள் மற்றும் நூல்களை உருவாக்கிய பேராசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.